ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

கடல் மீனின் கூக்குரல்





மீனவ நண்பா !

வாழ்க்கை
என்னும் கடலை
நீந்திக் கரையை
சேர்ந்தவன்
வெற்றியாளன். . .

நீயோ
கரையை சேர்ந்தாலும்
கடலையே
வாழ்க்கையாய்
கொண்டவன் ( ! )

எங்களுக்கு என்றுமே
கடலுக்குள்
இல்லையே . . .
எல்லை  
     
உங்களுக்கு என்றுமே    
கடலுக்கள்
தொல்லையே . . .
எல்லை !

எப்போதும்
நீதான் எங்களைப்
பிடித்துக்கொண்டு
செல்வாய் கரைக்கு . . .

இன்று
உன்னையல்லவா
பிடித்துக்கொண்டு
செல்கிறார்கள் சிறைக்கு ( ! )

எங்களை
காப்பாற்றதான்  யாருமில்லை
என்றிருந்தோம் . . .

இன்று
உன்னையும்
காப்பாற்றவே யாருமில்லை ( ? )

கடலைவிட்டு கரைக்கு
வந்தால் தான்
நான் கருவாடு . . .

இன்று
கரையைவிட்டு கடலுக்குள்
வந்தாலே  ” கடல் “
உனக்கு சுடுகாடு ( ! )