வெள்ளி, 9 மார்ச், 2012

தமிழ் மீனவன்


ஆழிப் பேரலைகளுக்கு
மத்தியில்  வலைகளை விரித்து
மீனவன் மீனைப் பிடிக்க
சிங்களவன் மீனவனைப் பிடிக்க
சிங்களவன் வலையிலோ
மீனும்  மீனவனும் . . .
இங்கு கரையில்
மனைவி காத்திருக்க
அங்கு சிறையில்
விடுதலைக்கு காத்திருப்பான்