வியாழன், 20 பிப்ரவரி, 2014

அலைபாயும் கண்கள்..


உன்னைத் தேடித்தேடியே
அலைபாயும் கண்களுக்கு
நிலவும் நீயும்
ஒன்றுதானடி...
நிலவு... மேகங்களுக்கும்
தென்னங்கீற்றுகளுக்கும் இடையே…
நீ... ஜன்னலுக்கும்
திரைச்சீலைக்கும் இடையே...
மறைவதும் பார்ப்பதுமாய்...

புதன், 19 பிப்ரவரி, 2014

காற்றாய் வரும் காதலி...கண்கள் தூங்கும்
இரவினிலே...
காற்றாய் வருகிறாள்
கனவில் காதலி...

கையில் இருக்கும்
காகிதமெல்லாம்...
கவிதை மழையில்
நனைகிறது !

நவீன வாழ்வின் அடையாளங்கள்...


பட்டாம்பூச்சிகளும்
தட்டாம்பூச்சிகளும்
ஒரே திசையில்
பறந்து கொண்டிருந்தன
இருந்தும்... அதன்
சிறகடிப்பைக் காணமுடியவில்லை.

புதன், 12 பிப்ரவரி, 2014

மலரும் மலர்கள்...

இருளுக்கும்
வெளிச்சத்திற்கும்
இடையிலான
இயந்திர வாழ்க்கை
இயங்கிக் கொண்டிருக்க...

சத்தமில்லாமல் வந்த
வாகனங்களின் வேகத்தை
வேகத்தடை இல்லாமலே
நிறுத்திக் கொண்டிருந்தது
சிவப்பு விளக்கின் ஒளி.