புதன், 19 பிப்ரவரி, 2014

நவீன வாழ்வின் அடையாளங்கள்...


பட்டாம்பூச்சிகளும்
தட்டாம்பூச்சிகளும்
ஒரே திசையில்
பறந்து கொண்டிருந்தன
இருந்தும்... அதன்
சிறகடிப்பைக் காணமுடியவில்லை.
குருவிகளும் கொக்குகளும்
மைனாக்களும் மயில்களும்
அசையாமல்...
நின்று கொண்டிருந்தன
இருந்தும்... அதன்
இனிய குரல்களை கேட்கமுடியவில்லை.

இலைகளும் செடிகளும்
கிளைகளும் கொடிகளும்
இங்கும் அங்குமாய்
படர்ந்து விரிந்து இருந்தன
இருந்தும்... அதன்
குளிர்ச்சியை உணரமுடியவில்லை.

மலர்ந்த பூக்களும்
பூங்கொத்துக்களும்
எல்லா இடங்களிலும்
பூத்துக் குலுங்கின
இருந்தும்... அதன்
மனத்தை நுகரமுடியவில்லை.

இயற்கையின் ரம்மியங்கள்
அனைத்தும் வீட்டினுள்
செயற்கையாய் !!!
விரவிக் கிடந்தன
இருந்தும்... அதன்
அழகை ரசிக்க முடியவில்லை.

6 கருத்துகள்:

 1. கணினிகள் பேசிக்கொண்டிருக்கின்றன, மனிதர்கள் யாரும் இங்கு இல்லை!

  பதிலளிநீக்கு
 2. அழகை ரசிக்கவும் முடியவில்லை...
  இத்தனை இருந்தும் நிம்மதியில்லை...!

  பதிலளிநீக்கு
 3. கவிதை அருமை, அதில் கருத்துகளும் குவித்துள்ளன.

  பதிலளிநீக்கு