புதன், 12 பிப்ரவரி, 2014

மலரும் மலர்கள்...

இருளுக்கும்
வெளிச்சத்திற்கும்
இடையிலான
இயந்திர வாழ்க்கை
இயங்கிக் கொண்டிருக்க...

சத்தமில்லாமல் வந்த
வாகனங்களின் வேகத்தை
வேகத்தடை இல்லாமலே
நிறுத்திக் கொண்டிருந்தது
சிவப்பு விளக்கின் ஒளி.

சிவப்புக்கும் பச்சைக்கும்
இடையிலான நொடிகளில்
ஓடிக்கொண்டும்... பேசிக்கொண்டுமிருந்தாள்
ஜன்னல் கண்ணாடிகளோடு...
சிறுமி ஒருத்தி...

கண்ணாடிகளில் பிம்பம் நகர
கையில் சிவப்பு ரோஜாக்களை
பிடித்தப்படி - அவள்
முறைத்திருந்தாள்
பச்சை விளக்கை ...

ஒவ்வொரு பூக்களின்
வாடலுக்கு முன்பான
போனியிலும் - அவளின்
முகமும் வாழ்க்கையும் - அங்கு
மலர்ந்து கொண்டிருந்தது...

ஒவ்வொரு பூக்களும்
இவளுக்காகவே...
பூத்துக் கொண்டிருக்கிறது.


1 கருத்து: