செவ்வாய், 3 செப்டம்பர், 2013

அதிசய மழை...


நெற்றியில் விழுந்த
நீர்த்துளி கண்டு நிமிர்ந்தேன்
கண்ணில் விழுந்தது
இன்னொரு நீர்த்துளி.

சட்டென இமைகள் மடிய
தலை தாழ்த்தினேன்
தரையெங்கும் நீர்த்துளிகள்
மறைந்தும் மறையாமலும்...

அதிசய நீர்த்துளி கண்டு
ஆகாயம் நிமிர்கிறேன் - அங்கே
ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும்
ஒன்றிணைந்து கீழிறிங்கின...

ஐந்தாறு துளிகள்... என்
முகத்தை முத்தமிட்டன...
மற்றத் துளிகள் என் வீட்டு
முற்றத்தை முத்தமிட்டன...

துளிகள் பெருகின... மழையாக!
அதிசய மழையில்!
உடல் நனைந்தது - ஆனால்
உள்ளம் மட்டும் கசந்தது.

என்னைத் தழுவிய மழைத்துளிகளால்
மண்ணைத் தழுவ முடியவில்லை...
தடையாய் நிற்கின்றன...
‘நவீன கான்கீரிட்’  சாலைகள்.

10 கருத்துகள்:

 1. அதிசய மழையில்...
  உடல் நனைந்தது - ஆனால்
  உள்ளம் மட்டும் கசந்தது...

  உள்ளதைப் பேசும் துளி..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் ரசனையான உங்கள் கருத்துக்கும் நன்றிகள்.

   நீக்கு
 2. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். தங்களின் கருத்தை விரைவில் நடைமுறையில் கொண்டு வர முயல்கிறேன்.

   நீக்கு
 3. கவிதை நன்றாக உள்ளது.அரசியல்வாந்திகள் போட்ட காங்கிரிட் தானே கூடிய சீக்கீரம் நமது மழைதுளி கரைத்துவிடும்.கவலையுராதே தம்பி.அது போல உனது எழுத்துகளும் கூடிய விரைவில் வலைப்பூ தாண்டி எழுத்து உலகில் கோலேச்சும்.

  பதிலளிநீக்கு