வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நன்றி

நெற்றி வியர்வை நிழத்தில் விழ
ஏர் பூட்டி நிழத்தில் உழ
நாற்று நட்டு நீர் பாய்ச்சி
களை பறித்து... பயிர் வளர
உழைப்பாற்றி காத்திருப்பான்
விவசாயி - கதிரை காண...

காத்திருக்கும் கண்களுக்கு
விளைந்த கதிர் தலை நிமிர்ந்து
நட்டவனுக்கு நன்றி சொல்லுகிறது
தன் தலை அசைத்து...
காத்திருந்தவன் மனம் நிறைய 
வணங்குகிறான் தன்  ” தலை தாழ்த்தி... “

6 கருத்துகள்:

  1. மனம் நிறைய
    வணங்குகிறான் தன் ” தலை தாழ்த்தி...
    உழைப்பின் உயர்வு..!

    பதிலளிநீக்கு