செவ்வாய், 28 ஜனவரி, 2014

பிளிறல்...தண்ணீருக்கான
தேடலின் தூரம்
தண்ணீரைப் போலவே
குறைந்து போனது.
      
அழகின் அழகான
குண்டு வயிற்றின் பசி - சில
உருண்டை கவளங்களால்
அடங்கிப் போனது.

தண்டவாளங்கள் மீதான
பயங்கள் எல்லாம்
நினைவைவிட்டு
கடந்து சென்றுவிட்டது.

எல்லாம் சரியாகிவிட்டது
என்று நினைப்பதற்குள்
சுதந்திரம் கால்களோடு
சங்கிலியால் பிணைக்கப்பட்டது.

சுதந்திரம் இருந்தால் மட்டும்
என்ன செய்துவிட முடியும்
என்ற யானையின் பிளிறல்
எவர் காதுகளையும் எட்டவில்லை.  

8 கருத்துகள்:

 1. வணக்கம்

  எல்லாம் சரியாகிவிட்டது
  என்று நினைப்பதற்குள்
  சுதந்திரம் கால்களோடு
  சங்கிலியால் பிணைக்கப்பட்டது...

  சிறப்பான வரிகள் படத்தைப்பார்த்தால் மனதில் வேதனைதான் அதிகம்...வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே...

   நீக்கு
 2. வரிகள் மிகவும் வருத்தப்பட வைக்கிறது... படம் அதை விட...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே... வரிகளுக்கு ஏற்ற படத்தை தேடுவதற்கு வரிகளை எழுத எடுத்துகொண்ட நேரத்தை போல் 10 மடங்கு அதிக நேரம் தேவைப்பட்டது.

   உங்களின் உணர்வுகளை தூண்ட இப்படங்கள் உதவியது எனக்கு வெற்றியோடு இணைந்த மகிழ்ச்சிகள்... மீண்டும் ஒருமுறை நன்றி தோழரே.

   நீக்கு
 3. தண்ணீருக்கான
  தேடலின் தூரம்
  தண்ணீரைப் போலவே
  குறைந்து போனது. -----------அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே...

   நீக்கு
 4. /* தண்ணீருக்கான
  தேடலின் தூரம்
  தண்ணீரைப் போலவே
  குறைந்து போனது */

  தண்ணீரின் இருப்பும் அளவும் குறைந்ததினால் தண்ணீருக்கான
  தேடலின் தூரம் அதிகமாகத்தானே ஆகியிருக்கும். எங்ஙனம் அது குறைந்திருக்கும் ?

  தூரம் அதிகமானதால் தானே தற்பொழுது அவைகள் ஊருக்குள் வந்து தவிக்கின்றன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலே கூறப்பட்ட வரிகளில் வருவது காடுகளில் வாழ்ந்து வரும் யானைப் பற்றி அல்ல. காட்டிலிருந்து பிடித்து வரப்பட்டு மிருகக்காட்சி சாலைகளிலோ, சர்கஸ்களிலோ, கோவில்களிலோ இன்னபிற வேலைகளிலோ ஈடுபடுத்தப்பட்டு வாழ்ந்து வரும் யானையின் சுதந்திர வாழ்வைப் பற்றியது.

   சுதந்திரம் இருந்தால்.... நீங்கள் கூறும் வரிகள் பொருந்தும்... சுதந்திரம் இல்லாத யானைகளின் வாழ்வை எனது வரிகளில் கூறியுள்ளேன்.

   உங்களின் கேள்விக்கு நன்றி தோழரே... இதன் மூலம் பலரும் புரிந்துகொள்ள கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு நன்றிகள்.

   நீக்கு